சீறிப்பாய்ந்து ஓடும் வெள்ளத்தில் கை கோர்த்து கொண்டு கடக்கும் மக்கள்-பரபரப்பு காட்சிகள்

ஓசூர் அருகே அந்தேவனப்பள்ளி பகுதியில் உள்ள சீனிவாசா ஏரி கனமழையால் நிரம்பிய நிலையில் ஏரியிலிருந்து நீர் மறுகால் சென்றது...

Update: 2022-08-05 07:41 GMT

கனமழையால் நிரம்பிய ஏரி : மறுகால் சென்ற தண்ணீரில் ஒருவரை ஒருவர் பிடித்தபடி சென்ற ஆபத்தாக பொதுமக்கள்

  • ஓசூர் அருகே அந்தேவனப்பள்ளி பகுதியில் உள்ள சீனிவாசா ஏரி கனமழையால் நிரம்பிய நிலையில் ஏரியிலிருந்து நீர் மறுகால் சென்றது. சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீரில் பொதுமக்கள் பால் கேன்களுடன் ஒருவரை ஒருவர் பிடித்து கொண்டு ஆபத்தை உணராமல் சென்றனர்.
  • ஓசூர் அருகேயுள்ள அந்தேவனப்பள்ளி பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சீனிவாசா ஏரி உள்ளது. கடந்த சில நாட்களாக அந்தேவனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பி உள்ளது. அதேபோல கனமழைக்கு சீனிவாசா ஏரியும் நிரம்பியது. ஏரி நிரம்பி அங்குள்ள ஒரு சாலையை கடந்து மறுகால் சென்றது.
  • தினம்தோறும் அப்பகுதி வழியாக பயணிக்கும் பொதுமக்கள் இதனால் கடும் அவதியடைந்தனர். இருந்த போதிலும் தங்களது அன்றாட வேலைகளுக்காக சீறிப்பாய்ந்து மறுகால் போடும் நீரில் அவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்தபடி இரண்டு கரைக்கும் பயணம் செய்தனர். பால் கேன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தூக்கி கொண்டு விவசாயிகளும் தண்ணீரை கடந்து சென்றனர். மறுகாலில் கரை புரண்டு ஓடிய ஏரி நீரில் பொதுமக்கள் விவசாயிகள் ஆபத்தை உணராமல் சென்றது அப்பகுதியில் நின்றவர்களை அச்சப்பட வைத்தது.
  • இந்நிலையில் ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன் என்பவர் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை வெள்ள நீர் அடித்து சென்றது. அப்போது அவர் அங்கிருந்த ஒரு மரக்கிளையை பிடித்து தப்பித்துள்ளார். 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அவரது இருசக்கர வாகனம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்