அத்திக்கடவு திட்ட ராட்சத குழாய் உடைப்பு... பெரும் அருவிபோல் பாய்ந்து வெள்ளக்காடான ஊர்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் ஏராளமான தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேறி வீணாகி வருகிறது.
சாலைப்பாளையம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு
20 அடி உயரத்திற்கு தண்ணீர் ஆர்பரித்து வெளியேறி
வருவதால் அருகில் உள்ள 2 குளங்கள் நிரம்பின. அங்குள்ள தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக செல்வதால் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.