ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே சைபன்புதூர் கிராமத்தில் 51 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கு முதன் முறையாக அரசு பேருந்து இயக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு அரசு பள்ளி தொடங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் சென்றுவர பேருந்து வசதி இல்லை, வசதியை செய்துக் கொடுக்க வேண்டும் என சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். இப்போது அது நிறைவேறிய நிலையில் பேருந்தில் உற்சாகமாக பயணம் செய்த மாணவ, மாணவியர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்