சடையப்பசாமி கோயில் மறுசீரமைப்பு விவகாரம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-08-23 14:08 GMT

ஈரோட்டில் 200 ஆண்டுகள் பழமையான சடையப்பசாமி கோவிலின் கருவறையை மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், இந்து சமய அறநிலைய துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான சடைப்பசாமி கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்ட போது, பழமையான முனி மற்றும் குதிரை சிலைகள் அகற்றப்பட்டு புதிய சிலைகள் நிறுவப்பட்டன. இந்த சூழலில் மறுசீரமைப்பு என்று கோயில் கருவறையில் சுயம்பு சிலையை அகற்றிவிட்டு புதிய சிலையை வைக்கவோ, கருவறை சுவரை மறுசீரமைப்பு செய்யவோ கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி ஆலயம் காப்போம் அமைப்பை சேர்ந்த பி.ஆர் ரமணன் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோயில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என்பதால் அதை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்கும்படி இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்