ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டார பகுதியில் முதல்போக நெல் சாகுபடிக்கான நடவுப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகளில், பெண்கள் நடவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பணியின் போது களைப்பு தெரியாமல் இருக்க, அவர்கள் கிராமிய பாடல்கள் மற்றும் எம்.ஜி.ஆர் பட பாடல்களை பாடி நெல் நடவு செய்து வருகின்றனர்...