"என் வண்டிய கொடுங்கய்யா.. ஐயோ அடிச்சி துரத்துறாங்களே" - நெஞ்சில் அடித்து கதறும் இளைஞன்..

Update: 2024-05-31 05:44 GMT

ஈரோட்டில் கடன் தவணை செலுத்தவில்லை என கூறி இரு சக்கர வாகனத்தை தனியார் வங்கி ஊழியர்கள் பறிமுதல் செய்ததால், இளைஞர் கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

மோளகவுண்டபாளையம் பகுதியை சேர்ந்த குழந்தைவேல், தீபா தம்பதியினரின் மகன்"அடிச்சி துரத்துறாங்க.. ஐயோ.. ஐயோ.." - பைக்கை விடாமல் நெஞ்சில் அடித்து கதறிய இளைஞர்

தரணிதரன்.வீரப்பன் சத்திரத்தில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில், 5 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி, தனியார் வங்கி கடன் உதவி மூலம் இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். முதல் மாத தவணையை சரியாக செலுத்திய அவர், கடந்த 2 மாதங்களாக தவணை தொகை கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரது வீட்டுக்கு சென்ற வங்கி ஊழியர்கள் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து எடுத்து சென்ற நிலையில், தனது குடும்பத்தினருடன் வங்கிக்கு சென்ற தரணிதரன், வாகனத்தை தரக்கோரி கண்ணீர் விட்டு கதறி அழுதார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் வங்கி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனத்தை திருப்பி வழங்குமாறு அறிவுறுத்தினர்....

Tags:    

மேலும் செய்திகள்