செய்யக்கூடத அசிங்கத்தை செய்த பெண்.. என்ன பாவம் செய்தது பிஞ்சு பெண் குழந்தை.. விசாரணையில் அதிர்ச்சி

Update: 2024-11-03 09:36 GMT

தஞ்சையைச் சேர்ந்த நித்யா என்பவர் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு ஈரோட்டுக்கு வந்து பேருந்து நிலைய பகுதியில் தங்கியுள்ளார்..

அப்போது சந்தோஷ் குமார் என்பவருடன் நித்யாவுக்கு

பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நித்யா கர்ப்பம் அடைந்தார். அந்தக் குழந்தையை விற்று விடலாம் என சந்தோஷ் நித்யாவிடம் தெரிவித்த நிலையில் நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து குழந்தையை விற்கும் முயற்சியில் ஈடுபட்ட சந்தோஷ் குமார் பெண் இடை தரகர்களான ஈரோட்டைச் சேர்ந்த செல்வி, ராதாமணி, பானு மற்றும் ரேவதி ஆகியோர் உதவியை நாடியுள்ளார். அவர்களும் நித்யாவின் பெண் குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்க பேரம் பேசி உள்ளனர்.

இறுதியாக 4 லட்சத்துக்கு அந்தப் பெண் குழந்தை விற்கப்பட்ட நிலையில் குழந்தை நினைவாகவே இருந்த நித்யா இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சந்தோஷ் குமார், செல்வி, ராதாமணி, பானு, ரேவதி ஆகிய 5 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையை தம்பதியினரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்