அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..| EPS | Athikadavu-Avinasi project

Update: 2024-08-18 01:38 GMT

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடர்ந்து, கால்நடை பூங்காவையும் உடனடியாக திறக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு திருப்பூர் கோவை மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாகவும், 2019-ம் ஆண்டில் அதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தாம் தொடங்கி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் 90 சதவீத பணிகள் முடிவுற்றிருந்ததாகவும், எஞ்சிய 10 சதவீத பணிகள் 6 மாதங்களில் முடிவடையும் என்ற நிலையில் இருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காகவே, இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும், தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மூன்றாண்டுகளுக்குப் பிறகு 10 சதவீத பணிகளை முடித்து முதல்வர் திறந்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, சேலம் - தலைவாசலில் துவங்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே பணிகள் நிறைவடைந்துள்ள, ஆசியாவிலேலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கிடப்பில் போட்டுள்ள காவிரி-குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்