BBA மற்றும் BCA படிப்புகளை தொடங்குவதற்கான அனுமதியை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் அனைத்து கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் பெற வேண்டும் என்கிற புதிய விதிமுறைக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிபிஏ மற்றும் பி.சி.ஏ படிப்புகளை புதிதாக தொடங்க அனுமதி வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி, மண்டல இணை இயக்குனர்களுக்கு, கல்லூரி
கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.