ECR-ல் எமனை நேரில் கண்ட தருணம்.. அடுத்த நொடியே துடித்த உயிர்-கடைசி பயணம்...நடுங்கவிடும் சென்னை இரவு
ECR-ல் எமனை நேரில் கண்ட தருணம்
அடுத்த நொடியே துடித்து பிரிந்த உயிர்
நடுங்கவிடும் கடைசி பயண சென்னை இரவு
ஈ.சி.ஆர். சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தூய்மை பணியாளருக்கு இறந்து போன எருமை மாடே எமனாக வந்த சோக சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
லாங் ரைடுக்கு ஏற்ற ஈசிஆர் சாலை, விபத்துகளுக்கு ஏற்ற பகுதியாகவும் கருதப்படுகிறது..
பொதுவாகவே ஈசிஆர் சாலையில் மின்னல் வேகத்தில் வாகனங்கள் செல்வதை காண முடியும்...இதனாலேயே விபத்துகள் அதிகரிப்பதாக கூறப்படும் நிலையில், சமீப காலமாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளும் விபத்து நடக்க முக்கிய காரணமாக உள்ளது....
அதிவேகமாக வாகனங்கள் செல்லும் சாலையில் மாடு மீது முட்டி வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஒரு புறமிருக்க... கனரக வாகனங்கள் மோதி மாடுகள் உயிரிழக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது...
இச்சூழலில் தான் பரிதாபமாக பறிபோயிருக்கிறது தூய்மை பணியாளர் ஒருவரின் உயிர்..
சென்னை மேடவாக்கம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 39 வயதான மாறன், கோவிலம்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர்...
புதன் கிழமையன்று, வழக்கம் போல், வேலை முடித்து விட்டு கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது தெரியவில்லை அதுவே அவரின் இறுதிப்பயணம் என்று..
காரணம் அவர் செல்லும் வழியில், பட்டிப்புலம் பகுதியில் ஏற்கனவே விபத்தில் சிக்கி எருமை மாடு ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது...
இதனையறியாத மாறன், அவ்வழியே செல்ல..எருமை மாடு இறந்து கிடந்ததை கவனிக்காமல் அதன் மீது மோதியுள்ளார்...
மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட மாறன், சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார், உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாடு உரிமையாளர்களின் அலட்சியமே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்கின்றனர் பொதுமக்கள்...