வீட்டில் வெடித்த பூகம்பம்..தீர்த்துவைக்காமல் கட்டையை எடுத்த மருமகன்..துடிதுடித்து இறந்த தந்தை
- விக்கிரவாண்டி அடுத்த வேளியந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் 4வது மகளான கவுசல்யாவை, திருவண்ணாமலையை சேர்ந்த கேசவன் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மதுபோதைக்கு அடிமையான கேசவன், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கேசவன் பெங்களூருவில் பணியாற்றி வந்த நிலையில், தந்தையின் வீட்டிற்கு கவுசல்யா தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
- பெங்களூருவில் இருந்து வேலியந்தல் கிராமத்திற்கு வந்த கேசவன், மதுபோதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அதனை தட்டிக் கேட்ட கவுசல்யாவின் தந்தையான ஆறுமுகத்தை கேசவன் கட்டையால் தாக்கிதில், தலையில் அடிபட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கேசவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.