தாராபுரம் அருகே 2 நாய்களை வேப்ப மரத்தில் தூக்கிட்டு கொன்ற வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முளையாம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் நகராஜ். இவர் பிராணிகள் வதை தடுப்பு சங்க செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், தனது கிராமத்தில் 2 நாய்களை மரத்தில் கட்டி தொங்கவிட்டு கொன்றதாக, பிராணிகள் வதை தடுப்பு அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், கிட்டுசாமி என்பவரது வளர்ப்பு நாய் மற்றும் தெருநாய் என மொத்தம் இரண்டு நாய்களை பிடித்து கொன்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. நடராஜ், பாலசுப்ரமணி, பன்னீர், காத்திசாமி உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பல், இரண்டு நாய்களையும் பிடித்து, பின்னர் வேப்பமர கிளையில் தூக்கில் தொங்கவிட்டு, கொலை செய்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நாகராஜ் புகார் தந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட 20 பேர் மீதும் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.