முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | DMK

Update: 2024-08-16 04:36 GMT

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10:30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் திமுகவின் 72 மாவட்ட செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

அண்ணா மற்றும் பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை சேர்த்து முப்பெரும் விழாவாக ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் திமுக கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டு முப்பெரும் விழாவை எங்கு கொண்டாடலாம் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2026-ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் பணிகளை திமுக இப்போதே தொடங்கிவிட்ட நிலையில் தேர்தல் பணிகள் குறித்தும், திமுகவில் அமைப்பு ரீதியாக கட்சியில் சில மாற்றங்களை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படலாம் என்ற தகவலும் பரவி வரும் நிலையில் இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கோப்புக்காட்சி

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் 72 மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்

முப்பெரும் விழாவை ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் திமுக கொண்டாடி வருகிறது

இந்த ஆண்டு முப்பெரும் விழாவை எங்கு கொண்டாடலாம் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்

Tags:    

மேலும் செய்திகள்