சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மோதிரம் பரிசளித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி மாநாட்டை மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தி இருப்பதாகவும், சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளின் பணிகளை போற்றி அங்கீகரிக்கும் விதமாக கணையாழி அணிவித்து மகிழ்ந்ததாகவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெல்லச் செய்வோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.