முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதற்கு அனுமதி அளித்த ராசாத்தி கருணாநிதிக்கு கனிமொழி எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது பதிவில், "கருணாநிதியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால், அவரது படைப்புகள் அதிக அளவிலான மக்களிடம் சென்று சேரும்" என்றும், இதற்காக தமிழக அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.