தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க வேலூர் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் தலைமையில் கடந்த 24 மணி நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில் சோதனை நடைபெற்றது. அதில், 10 பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், விதிகளை மீறியதாக 64 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.