கடலென கூடிய மக்கள் கூட்டம்...திக்குமுக்காடிய தி.நகர்
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சென்னை தியாகராய நகரில் புத்தாடை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. தியாகராய நகர் ரங்கநாதன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகள் வீதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் துணிகள், நகைகள், இனிப்புகள், பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். முக்கிய இடங்களில் உயர் கோபுரங்களை அமைத்து, சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.