கணவன் - மனைவி இடையே தகராறு... மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்! கடைசியில் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் இன்னாசிமுத்து. இவர் குடும்ப தகராறில் தன் மனைவி மருதம்மாளை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இன்னாசிமுத்துவும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலே இன்னாசி முத்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.