மூடிக்கிடந்த 60 வருட பழைய கிணறு... தோண்டிய மக்களுக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்

Update: 2024-09-14 07:48 GMT

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே 30 ஆண்டுகளாக பயனற்று கிடந்த கிணற்றை, இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தாமாக முன்வந்து தூர்வாரினர். காளப்பட்டி கிராமத்தில், 60 ஆண்டிற்கு முன்பாக குடிநீர் தேவைக்காக தோண்டப்பட்ட கிண்று, கடந்த 30 ஆண்டு காலமாக தூர்ந்து போய் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல், ஊராட்சி சார்பாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து, குழாய் மூலம் வழங்கப்பட்ட உப்பு தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்களிடம் வசூல் செய்து கிணற்றை தூர் வாரினர். அதில் இருந்து பால் போன்று சுத்தமாக கிடைத்த தண்ணீரை, கிராம மக்கள் மகிழ்வோடு பருகினர்.

Tags:    

மேலும் செய்திகள்