பள்ளி பேருந்து மோதி துடிதுடித்து பறிபோன 3 உயிர் - திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவாடியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பஞ்சு மற்றும் 7 வயது மகன் ஸ்ரீதர் மூவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முடக்குசாலை என்னும் இடத்தில், எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்த மோதியதில் கணவன், மனைவி, மகன் உள்ளிட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உடலை மீட்ட போலீசார் உடற்கூறாய்விற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது