ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு - தீக்குளிக்க முயற்சி

Update: 2024-10-30 06:51 GMT

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு - தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், ஆக்கிரமித்து

கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்ற முயன்றபோது பொதுமக்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

கொடைக்கானல் சண்முகபுரம் பச்சை மரத்து ஓடைப்பகுதியில் 14 வீடுகளை சிலர் சாலையை ஆக்கிரமித்து கட்டியதாகக்கூறி பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில், 14 வீடுகளையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, கடந்த 13ம் தேதி மூன்று வீடுகள் அகற்றப்பட்டு, மீதமுள்ள வீடுகளை காலி செய்ய சில நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் வந்தபோது, தீபாவளியையொட்டி மேலும் சில நாட்களுக்கு பொதுமக்கள் அவகாசம் கோரினர். இதனிடையே, ஜேசிபி மூலம் 11 வீடுகளை அகற்ற முயன்றபோது, 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது உடல்களில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வீடுகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும், இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்