செம்ம டேஸ்ட்டில் ராக்கெட், புஷ்வானம் - பேக்கரியில் வகை வகையான பட்டாசு.. வித்தியாசமான ஸ்வீட்ஸ்..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மயிலாடுதுறையில் உள்ள பேக்கரி கடை ஒன்றில், பட்டாசு வடிவில் இனிப்பகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளை கவரும் வகையில், சங்குசக்கரம், ராக்கெட், புஷ்வானம் வடிவில் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பட்டர் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட் உள்ளிட்ட கடலையால் தயாரிக்கப்பட்ட மிட்டாய் வகைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இதுமட்டுமல்லாமல், வீட்டுமுறை பலகாரங்களான தினை, சாமை, வரகில் தயாரிக்கப்பட்ட அதிரசம், கருப்பு உளுந்து உருண்டை என பாரம்பரிய இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.