துணிக்கடை தொழிலாளிக்கு டிமிக்கி - கைவரிசை காட்டிய கேடி பெண்கள் - வெளியான சிசிடிவி காட்சி
தருமபுரியில் வாடிக்கையாளர் போல துணி கடைக்குள் நுழைந்து, 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடைகளை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள ரெடிமேட் கடைக்கு வந்த 2 பெண்கள், துணி வாங்குவது போல நடித்து நூதன முறையில் 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகளை திருடிக் கொண்டு சென்றனர். புகாரின் பேரில் தருமபுரி பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித் திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த சுஜாதா, சுமதி என்பது தெரியவந்தது.