தனக்கு முதலில் திருமணம் ஆகாத விரக்தி.. அண்ணன் செய்த தகராறு.. கோவத்தில் தம்பி செய்த கோர சம்பவம்

Update: 2024-05-29 17:07 GMT

தருமபுரி மாவட்டம் சாவடியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். கூலித் தொழிலாளியான இவர், திருமணமாகாத மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் , திருமணமாகி குழந்தைகள் உள்ள, தன் உடன் பிறந்த தம்பி ரகுவுடன் சேர்ந்து சம்பவத்தன்று மோகன் மது அருந்தி இருக்கிறார். அப்போது, தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி மோகன் மதுபோதையில் தகராறு செய்த நிலையில், ஒரு கட்டத்தில் தகராறு முற்றி இருக்கிறது. இதில், அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொன்ற ரகு, உடலை வீட்டருகே புதைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரகுவின் மனைவி அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மோகனின் சடலத்தை தோண்டி எடுத்த நிலையில், அவரின் தம்பியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்