"நீ செத்தால் தான் நிம்மதி..."மகளின் வளைகாப்பு அன்று தாய்க்கு 11 இடத்தில் பயங்கர கத்தி குத்து - பின்னணியில் இருந்த தாயின் மற்றொரு முகம்
அரூர் அருகே மகளின் வளைகாப்பு தினத்தில் தாயை கள்ளக்காதலன் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தேக்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம்-ஜெயமணி தம்பதியின் மூத்த மகள் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த உறவினர் மனோகரன் என்பவருக்கும், ராஜாராமுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதாவது, மனோகரனுக்கும், ஜெயமணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததை கணவர் ராஜாராம் தட்டிக்கேட்டதால் பகை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மனோகரன், ஜெயமணியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று உன்னால் தான் பிரச்சினை... நீ செத்து தொலைந்தால் தான் நிம்மதி... எனக்கூறி ஆக்ரோஷமாக கத்தியால் குத்தியுள்ளார். உடலில் 11 இடங்களில் குத்தப்பட்டதால் ஜெயமணி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கள்ளக்காதலன் மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.