வாசல் வரை வந்து கெஜ்ரிவாலை வழியனுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் | MK Stalin | Arvind Kejriwal | Delhi

Update: 2023-12-20 02:11 GMT

டெல்லியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறவுள்ள நிலையில், அக்கூட்டணியில் பங்கேற்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து வருகிறார். அந்த வகையில், டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அரவிந்த் கெஜ்ரிவால் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருக்கு தமிழ்நாடு இல்லத்தில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு வரவேற்றார். சுமார் அரை மணி நேரம் சந்திப்பு நடைபெற்ற நிலையில், வாசல் வரை வந்து, அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் ஸ்டாலின் வழியனுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்