தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்க இரண்டு நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. மும்பை துறைமுகம் முதல் விசாகப்பட்டினம் துறைமுகம் வரை பயணிகள் சேவை கப்பல் துவங்கப்பட உள்ளது. தூத்துக்குடி மற்றும் குஜராத் துறைமுகங்களில் ஆழ்கடலில் காற்றாலை அமைத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்காக கடலில் காற்றாலை நிறுவுவதற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.