மாமல்லபுரம் நாட்டிய விழாவின் 5ஆம் நாள்

Update: 2022-12-28 01:52 GMT

மாமல்லபுரம் நாட்டிய விழாவின் 5-ஆம் நாளில் நடைபெற்ற மயிலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மக்கள் கண்டு ரசித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் ஒரு மாதம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நாட்டிய விழா கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 12ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற உள்ளது. இந்நிலையில்,5ஆம் நாள் நிகழ்ச்சியில் மயிலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், மக்கள் அதை கண்டு ரசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்