விழுப்புரம் கோயிலில் ஆளுநர் சாமி தரிசனம் - வான்சாஸ்திரத்தை விளக்கிய ஆய்வாளர்
திருமுண்டீச்சரம் சிவலோகநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, கோயிலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான வான் சாஸ்திர கல்வெட்டு குறித்து கேட்டறிந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருமுண்டீச்சரத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலோகநாதர் ஆலயத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் கருவறைக்கு பின் உள்ள வான்சாஸ்த்திரம் குறித்த கல்வெட்டினை பார்வையிட்ட ஆளுநர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். வான்சாஸ்த்திர கல்வெட்டு குறித்து ஆய்வாளர்கள் ஆளுநருக்கு விளக்கமளித்தனர். ஆளுநர் வருகையையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.