"வங்கக் கடலில் சூறாவளி...அடுத்த 48 மணி நேரத்திற்கு" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Update: 2023-08-17 11:59 GMT

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்த 3 தினங்களுக்கு தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல், வடக்கு ஆந்திர கடலோரம், அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல், வடமேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய வடகிழக்கு வங்கக் கடலில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்