சொகுசு பைக் கேட்டு நடனம் ஆடிய இளைஞர்.. தவறிய கால்..! 5 நிமடத்தில் பிரித்த உயிர்.. கதறும் பெற்றோர்..! கடலூரில் அதிர்ச்சி சம்பவம்
உயர் ரக சொகுசு பைக் வாங்கித் தர பெற்றோர் மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் மிரட்டல் விடுத்த இளைஞர், கால் தவறி கீழே விழுந்ததில் கழுத்தை கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன். 24 வயதான இவர், கட்டட தொழிலாளியான நிலையில், தன் பெற்றோரிடம் உயர் ரக சொகுசு பைக் கேட்டு அடம் பிடித்திருக்கிறார். இறுதி வரை பெற்றோர் வாங்கி தர மறுத்ததாக தெரிகிறது. இதனால், பெற்றோரை மிரட்டும் வகையில், அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்வதுபோல் இளைஞர் மிரட்டியதாக தெரிகிறது. இதில், கால் தவறி கீழே விழுந்ததில் கழுத்தை கயிறு இறுக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.