நெஞ்சில் கஞ்சா செடியும் காதலி பெயரும்-போலீஸையே அதிரவைத்த இளைஞர-விசாரணையில் வெளியா திடுக்கிடும் தகவல்

Update: 2024-06-13 07:08 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூரில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர், தனது நெஞ்சில் கஞ்சா செடி மற்றும் காதலியின் பெயரை பச்சைக்குத்தி இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட முத்தமிழ் நகர் பகுதியில் வசிக்கும் 21 வயதாகும் கார்த்திக், கோயில் திருவிழாவுக்குச் சென்றபோது காதல் ஏ​ற்பட்டு, 15 வயது பழங்குடியின சிறுமியை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி கர்ப்பமான நிலையில், கூடலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, சிறுமிக்கு 15 வயது ஆகிறது என்பது உறுதியானது. இதுகுறித்து சமூக குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். பின்னர் புகாரின்பேரில், இளைஞர் கார்த்திகை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில், அந்த இளைஞர் ஏற்கனவே பல கஞ்சா மற்றும் போக்சோ வழக்குகளில் கைதானது தெரியவந்தது. மேலும், அந்த இளைஞர் தனது நெஞ்சில் ஒரு கஞ்சா செடி, அதன் அருகில் காதலியின் பெயரை பச்சை குத்தியுள்ளார். இதையடுத்து கார்த்திகை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்