காதணி விழாவிற்கு 150 தட்டுகளில் சீர்வரிசையை லாரியில் ஏற்றி வந்த தாய்மாமன் - வைரலாகும் வீடியோ
கட்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் - சசிதா தம்பதியினரின் மகன் மற்றும் மகளுக்கு காதணி விழா வைத்திருந்தார். இந்த காதணி விழாவிற்கு, குழந்தைகளின் தாய் மாமானான ரஞ்சித் குமார் என்பவர், சீர்வரிசை 150 தட்டுகளை, 10 சக்கரம் கொண்ட லாரியில் ஏற்றிக்கொண்டு வந்தார். பட்டாசு வெடிக்க மேளதாளம் முழங்க இந்த சீர்வரிசைகள் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஊர்வலமாக கொண்டு வந்து திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு குழந்தைகளுக்கும் காதணி விழா சிறப்பாக நடைபெற்றது. பழங்கள், இனிப்பு வகைகள், மிட்டாய்கள் மற்றும் உலர் பழங்கள் என அனைத்து வகையான சீர்வரிசை பொருட்களும் இந்த 150 தட்டுகளில் இருந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.