கடலூரில் ஏழரை கூட்டிய 7 பேர்.. விழுந்து கை, கால் முறிவு... பாவபட்டு ஹாஸ்பிடலில் சேர்த்த காவல்துறை

Update: 2024-06-15 17:36 GMT

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் தொடர் வழிபறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அசோக்ராமன் மற்றும் சந்துரு ஆகிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சில தினங்களுக்கு முன்பு அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க முயன்ற்போது கீழே விழுந்து கால் கைகள் உடைந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதே போல மஞ்சக்குப்பம் கிழக்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்த கௌரி என்பவரை மிரட்டி நகைகளை பறித்து சென்று தப்ப முயன்ற 5 பேரை போலீசார் துரத்தியதில் தங்கபாண்டியன் உள்பட மூன்று பேருக்கு காலிலும் 2 பேருக்கு கைகளிலும் முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு அடுத்தடுத்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்