கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஐந்து கம்மா மேம்பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் பாலத்தில் செல்லும் வாகனங்கள் அதிர்வை உணர்ந்தன. இதனையடுத்து, பாலத்தில் விரிசலின் அளவும் தொடர்ந்து அதிகரித்தது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரிசலில் கான்கிரீட் போட்டு மூடினர்.