ரூ.10 மேங்கோ கூல்டிரிங்ஸ் குடித்ததும் மூச்சு..பேச்சு.. இல்லாமல் போன சிறுவன் - செய்வதறியாமல் நின்ற தாய்..

Update: 2024-09-13 02:16 GMT

கடலூர் அருகே பத்து ரூபாய் மேங்கோ கூல்டிரிங்ஸ் குடித்து மயங்கி விழுந்த சிறுவன், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருத்தாசலம் அடுத்து சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் - கிருஷ்ணவேணியின் மகன் ஜெகதீஷ். இவர் சாத்தப்பாடி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய் மேங்கோ கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்துள்ளார். அடுத்த பத்து நிமிடத்தில் அதே இடத்தில் ஜெகதீஷ் மயங்கி விழுந்துள்ளான். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஜெகதீஷ், மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஜெகதீஷ் குடித்த பத்து ரூபாய் மேங்கோ கூல்டிரிங்ஸ்சை பரிசோதனை செய்ததில் அந்தப் பாட்டிலில் சோடியம் கார்ப்போஹைட்ரேட் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதாகவும், அதனால் அந்த கூல்ட்ரிங்ஸ் ஃபுட் பாய்சனாக மாறியிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்