சத்திய ஞான சபை.. கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

Update: 2024-08-30 15:38 GMT

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இதனை அமைப்பதற்காக அப்பகுதி மக்கள் 106 புள்ளி 4 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர். தற்போது இதில் 26 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில், ஆக்கிரமிப்புக்குள்ளான நிலங்களை மீட்க குழு அமைக்க வேண்டுமென கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன் உள்ளிட்ட 5 பேர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவை, மாவட்ட ஆட்சியர் அமைத்துள்ளார். இந்தக் குழுவினர் ஆக்கிரமிப்பு நிலங்களை கண்டறிந்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்