ரத்தம் தெறிக்க பல கொலைகள்? பிரபல ரவுடி சி.டி மணி அதிரடி கைது... கதறும் தந்தை

Update: 2024-09-22 10:01 GMT

ரத்தம் தெறிக்க பல கொலைகள்? பிரபல ரவுடி சி.டி மணி அதிரடி கைது - கண்முன் வந்து போன என்கவுண்டர்... கதறும் தந்தை

பிரபல ரவுடி சி.டி மணியை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், தனது மகனின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க அவரது தந்தை கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தார்.

பிரபல ஏ+ கேட்டகரி ரவுடியான சி.டி மணியை சேலத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது 10 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நண்பரான சி.டி மணி, வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், தனது மகனின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க அவரது தந்தை பார்த்தசாரதி​வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்