கண்டம் தாண்டி கரம்பிடித்த காதல் அன்பு ஒன்றே மதம்,சாதி, மொழி கரூர் பெண்ணை கவர்ந்த துருக்கி மாப்பிள்ளை
கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் துருக்கி நாட்டு காதலனை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்..
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தை சேர்ந்த தங்கராஜ் மகள் பிரியங்கா, பி.டெக் முடித்து டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்போது துருக்கி நாட்டை சேர்ந்த எம்.டெக் பட்டதாரி இளைஞரான அஹமத் கெமில் கயான் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது. இதனையடுத்து, இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமண விழாவில், மாப்பிள்ளை அழைப்பு, தாலி கட்டுதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. ஒவ்வொரு சம்பிரதாயமும் தமிழ் தெரியாத மாப்பிள்ளை வீட்டாருக்கு ஆங்கிலத்தில் விளக்கப்பட்டது. துருக்கியில் இருந்து வந்த மாப்பிள்ளை வீட்டார், திருமணத்தை பார்த்து வியப்படைந்தனர்...