குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம், கடைகளின் குத்தகை தொகை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கோவில் நிர்வாக அதிகாரிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தென்காசி அருகே உள்ள குற்றால அருவிக்கு வரும் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் உரிய வசதிகள் செய்து தருவது தொடர்பாக கிருஷ்ணசாமி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. கோவில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை சுற்றிலும் கடைகள் தான் உள்ளதாகவும், வழிபாட்டு தலங்களை வணிக நோக்கில் பயன்படுத்த கூடாது என கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் எவ்வளவு உள்ளன ....கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் எவ்வளவு கடைகள் உள்ளன? அவர்களின் வாடகை குத்தகை தொகை எவ்வளவு? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதுகுறித்து விரிவான அறிக்கை தாக்க செய்ய கோவில் நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட்ட வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.