ஆடிப்பெருக்கு, வார இறுதி நாட்களை முன்னிட்டு, குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லேசான வெயிலோடு குளிர்ந்த காற்றும் வீசுவதால், உள்ளூர்வாசிகள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.