மஞ்சம் புல் விவசாயம்... வெடித்துச் சிதறிய பாய்லர்.. பலியான மாடு... திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்துள்ள சின்ன குரும்பத்தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் தனது விவசாய நிலத்தில் மஞ்சம் புல் விவசாயம் செய்து அதில் இருந்து மூலிகை எண்ணெய் தயாரித்து வந்துள்ளார்... அவரது நிலத்தில் இருந்த 2 டன் எடையுள்ள பாய்லர் வெப்பம் அதிகமாகி வெடித்துச் சிதறி சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில் விழுந்து மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது... மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த மாடு பரிதாபமாக உயிரிழந்தது... பாய்லரில் இருந்த இரும்புத் துண்டுகள் விழுந்ததில் 5க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன... எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.