"முதல்வரை பார்த்து பிரதமர் பாடம் கத்துக்கணும்.." - செல்வப்பெருந்தகை ஆவேசம்
முதலமைச்சர் மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இந்தியா கூட்டணியும் முழுவதுமாக அவரை நம்புவதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அண்ணாசாலையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து எவ்வாறு ஆட்சி நடத்த வேண்டும் என்பதை பிரதமர் மோடி கற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.