திருச்சூரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில்
காங்கிரஸ் தொண்டர்கள் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
கேராளாவின் திருச்சூர் மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளீதரன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். வாக்கு எண்ணிக்கை நாளில், மாவட்ட மற்றும் மாநிலத் தலைமையை கே.முரளீதரன் விமர்சித்திருந்தார். காங்கிரஸ் தலைவர்கள் யாரும் தனக்கு பிரச்சாரம் செய்ய வரவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் முரளீதரனின் தோல்வி குறித்து ஆலோசனை கூட்டம், திருச்சூர்
காங்கிரஸ் கமிட்ட் அலுவலத்தில் இன்று நடைபெற்றது. அப்போது முரளீதரனின் ஆதரவாளர்களான குட்டியாச்சிரா மற்றும் சுரேஷ் ஆகியோரை, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வல்லூர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரு கோஷ்டி ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்
ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளன.