கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுக்கடுக்காக வந்த புகார்கள் - அதிர்ச்சி.. பரபரப்பு
கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அடுக்கடுக்காக வந்த புகார்கள் - அதிர்ச்சி.. பரபரப்பு
கடலூரில் பட்டா மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று 4 ஆண்டுகளாகியும், பட்டா வழங்காமல் விஏஓ இழுத்தடித்து வருவதாக பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட வருவாய் தீர்வாய நிகழ்வில் பெண் குற்றம் சுமத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற முதியவரும், தனக்கு சொந்தமான நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் கலையரசன், வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றி எழுதி கொடுத்து விட்டதாக புகாரளித்தது பரபரப்பை மேலும் கூட்டியது. இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தினர்.