"ஏப்ரலில் ஏற்றாமல் செப்-இல் ஏன்?".. முக்காடு போட்டு வந்த அதிமுக கவுன்சிலர்கள்

Update: 2024-10-24 07:21 GMT

கோவை மாநகராட்சியில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக கவுன்சிலர்கள் தலையில் முக்காடு போட்டபடி கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக, மாநகராட்சி மேயர் ரங்கநாயகியுடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவுன்சிலர்களும் வாக்குவாதம் செய்தனர். இதேபோல், கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மின் மயானம் பராமரிப்பு பணிகளை மீண்டும் ஈஷா யோகா மையத்திற்கு வழங்கக் கூடாது என சிபிஎம் உறுப்பினர் ராமமூர்த்தி வலியுறுத்தினார். இதையடுத்து, அந்த தீர்மானத்தை அடுத்த மாதம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்