தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவையின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது...
டவுன்ஹால்,ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை 100 அடி சாலை போன்ற இடங்களில் மக்கள் படையெடுத்துள்ளனர்.
கோவையில் மாலை நேரங்களில் மழை பெய்து விடுவதால் காலையிலேயே கடைவீதிகளில் படை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
பெரிய கடைகள் மட்டுமல்லாமல் சாலை ஓர வியாபாரிகளிடமும் அதிக அளவில் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்
கடைவீதிகளில் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் காவல்துறை பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது
கோவை மாநகரில் மட்டும் தீபாவளி பண்டிகை ஒட்டி 3500 காவல்துறையினர் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்
இதைத் தவிர அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட AI காமிராக்கள் அமைத்து காவல்துறையினர் கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.