முதல்வர் கோரிக்கை... தலையசைத்த ஃபோர்டு நிறுவனம் | CM Stalin | Ford | Chennai

Update: 2024-09-15 02:14 GMT

முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

முதல்வரின் அமெரிக்க பயணம் மற்றும் முதலீடு குறித்து பதிவிட்டுள்ள டி.ஆர்.பி.ராஜா, இந்தப் பயணத்தில் 7,616 கோடி ரூபாய் புதிய முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம், 11 ஆயிரத்து 516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, ஃபோர்டு நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை மீண்டும் துவங்கப் போவதாக அறிவித்துள்ளது என தெரிவித்துள்ளார். வெகு விரைவில் பல முதலீடுகள் குவிய உள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியும் என டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது முதலீடுகள் செய்ய முன்வந்த அனைவருடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடவில்லை என்றும், யார் யார் உறுதியாகப் பணியைத் துவக்குவார்கள் என்பதைப் பல வகையில் உறுதி செய்து ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், அனைத்து ஒப்பந்தங்களும் 100 சதவிகிதம் நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகவும் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்