சென்னை நபரை வைத்து இந்தியாவில் சீனர்கள் செய்த கோடி சதி.. வாக்குமூலம் கேட்டு ஆடிப்போன ED

Update: 2024-08-18 09:43 GMT

சென்னை ஆவடியை சேர்ந்த பொறியாளர் ஜோசப் ஸ்டாலினின் அலுவலகம் மற்றும் அவருடைய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் திடீர் சோதனை நடத்தினர். ஜோசப் ஸ்டாலினின் வங்கி கணக்குகள் மூலம் 75 கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை அருண் சாகு, அலோக் சாகு, சேட்டன் பிரகாஷ் ஆகியோரையும் கைது செய்தனர். 4 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. சீன ஆன்லைன் செயலி மூலம் ரூபாய் 400 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இந்த செயலிகளை செயல்படுத்த தேவையான பணத்தை சீனர்கள், கிரிப்டோ கரன்சிகளாக ஜோசப் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளனர். இந்த கிரிப்டோ கரன்சிகளை இந்திய ரூபாய்களாக மாற்றிய அவர், இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு செயலிகளை நடத்தி மோசடி செய்ததையும் கண்டுபிடித்தனர். மோசடி பணத்தின் மூலம் கொல்கத்தா, ஒடிசா ஆகிய இடங்களில் 4 பேரும் சில நிறுவனங்களை நடத்தியது தெரியவந்ததால் 4 பேரும் கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்