16 வயது சிறுமி கடத்தல்.. நண்பனின் மகளுக்கு பாலியல் கொடுமை - மிருகமாய் மாறிய போலீஸ்
நண்பனின் மகளான 16 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த போலீசார் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல்நிலைய போலீசாரான இவர், தன் நண்பரின் மகளான 16 வயது சிறுமியை காவல் குடியிருப்புக்கு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து சைல்டு ஹெல்ப் லைன் மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில், திருநாவுக்கரசை போக்சோவின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில், திருநாவுக்கரசை பணியிடை நிக்கம் செய்து மாவட்ட எஸ்பி மீனா உத்தரவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.